Tuesday, 18 March 2014

அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு

பணக் கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு
ஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் மகாலட்சுமி கொலுவிருப்பதாக வேதசாஸ்திரம் கூறும் எண் வகைப்பொருட்களை ஒரு பாட்டிலில் (மிட்டாய் டின் போன்ற சீசா) போட்டு அதன் அருகில் கமலதீபம் இரண்டை ஏற்றி வைத்து மனமுருகி வழிபட்டால் கஷ்டங்கள் மறைந்து வளம் உண்டாகும். அஷ்டமங்கலப் பொருட்களாவன:-
1. குண்டு மஞ்சள்-3, 2. குங்குமம், 3. மரச்சீப்பு, 4. தர்ப்பணம் என்ற கண்ணாடி, 5. சந்தனம், 6. தாம்பூலம், 7. தீபம், 8. ரவிக்கைத்துணி (பச்சை நிறம்). இரண்டு பக்கங்களிலும் கமலதீபங்களை ஏற்றி நடுவில் ஒரு தட்டில் சீசாவை வைத்து.........

.
ஓம் லட்சுமி நம
ஓம் ஸ்ரீதேவி நம
ஓம் கமலாசனி நம
ஓம் பத்ம பூஜனி நம
ஓம் மகாதேவி நம
ஓம் சங்கமாதா நம
ஓம் சக்ர மாதா நம
ஓம் கதா மாதா நம
ஓம் ஐஸ்வர்னய நம
ஆகிய ஒன்பது திருமகள் நாமங்களை எட்டு தடவைகள் கூற வேண்டும். பிறகு ஆத்ம பிரதட்சிணம் (தன்னையே சுற்றிக் கொள்ளுதல்) செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பணக்கஷ்டம் தீரும். லட்சுமியின் பார்வை பட்டு செல்வம் பெருகும்.

No comments:

Post a Comment